செய்திகள்

நியூசி. டி20யில் குழப்பம்: இலக்கு என்னவென்று தெரியாமல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச பேட்ஸ்மேன்கள்!

DIN

நியூசிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இலக்கு என்னவென்று தெரியாமல் வங்கதேச தொடக்க வீரர்கள் களமிறங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேபியரில் நடைபெறும் 2-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து மழை காரணமாக குறைவான ஓவர்களிலேயே விளையாடியது. அந்த அணி, 17.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 31 பந்துகளில் 58 ரன்களும் டெரில் மிட்செல் 16 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். மழை காரணமாக நியூசி. அணியின் இன்னிங்ஸ் 17.5 ஓவர்களுடன் முடித்துக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து வங்கதேச பேட்டிங் செய்ய களமிறங்கியது. அப்போது அவர்கள்  என்ன இலக்கை விரட்ட வேண்டும் என அறிவிக்கப்படாமல் இருந்தது. மழை காரணமாக டிஎல்எஸ் முறையில் இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் அதைப் போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் அறிவிக்காத நிலையில் வங்கதேச வீரர்கள் இலக்கு தெரியாமலேயே இன்னிங்ஸைத் தொடங்கினார்கள். 1.3 ஓவர்கள் வரை தொடக்க வீரர்களான லிடன் தாஸும் முகமது நைமும் விளையாடினார்கள். இந்தக் குழப்பத்தைத் தொடர்ந்து வங்கதேச மேலாளர், போட்டி நடுவர் ஜெஃப் குரோவின் அறைக்குச் சென்று புகார் கூறினார். இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு டிஎல்எஸ் முறையில் கணக்கிட்டு வங்கதேச அணி வெற்றி பெற 16 ஓவர்களில் 170 ரன்கள் தேவை என்பதை குரோவ் அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT