இந்திய மகளிர் டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளருக்கு கரோனா பாதிப்பு
இந்திய மகளிர் டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் டி20 அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பைச் சேர்ந்த 32 வயது ஹர்மன், இந்திய அணிக்காக 2 டெஸ்டுகள், 104 ஒருநாள், 114 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சமீபத்தில் லக்னெளவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றார். அடுத்து நடைபெற்ற டி20 தொடரில் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் கடந்த நான்கு நாள்களாக லேசான காய்ச்சல் இருந்ததால் கரோனா பரிசோதனையை ஹர்மன்ப்ரீத் மேற்கொண்டார். இதில் கரோனா பாதிப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தொடர்ச்சியாக ஹர்மன்ப்ரீத் கெளருக்குப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதனால் கரோனா பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறிய பிறகே அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அறியப்படுகிறது.