செய்திகள்

கரோனா நிவாரண நிதி: இந்தியாவுக்கு ரூ. 29 லட்சம் அளித்துள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா

இந்தியாவின் கரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ. 29 லட்சம் அளித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு.

DIN

இந்தியாவின் கரோனா நிவாரணப் பணிகளுக்காகக் கிட்டத்தட்ட ரூ. 29 லட்சம் அளித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு.

இந்தியாவில் கரோனா தொற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3,689 போ் பலியாகினா். இவா்களுடன் சோ்த்து தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை மொத்தம் 2.15 லட்சமாக உயா்ந்துள்ளது. மேலும் கரோனாவுக்கு ஒரே நாளில் 3.92 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் சோ்த்து ஒட்டுமொத்தமாக 1.95 கோடி போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியா மேற்கொள்ளும் கரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ. 28,61,714 (50,000 ஆஸ்திரேலிய டாலர்) அளித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு. இந்தத் தொகை யுனிசெஃப் ஆஸ்திரேலியா அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கரோனா நிவாரணப் பணிகளுக்கு அத்தொகை செலவிடப்படும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.46 கோடி

சிதம்பரம் கூத்தாடும் பிள்ளையாா் கோயில் கொடியேற்றம்

ஏழு அம்ச எழுச்சி உரை!

விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு

சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை கோரி முறையீடு: மனுவாக தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT