முகப்பு
செய்திகள்

கரோனா நிவாரண நிதியாக ரூ. 2 கோடி வழங்கிய விராட் கோலி & அனுஷ்கா சர்மா

கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 7 கோடி அளவுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் விராட் கோலி.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:


இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 7 கோடி அளவுக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார் விராட் கோலி.

இந்தியாவில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4.12 லட்சமாக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 3,980 போ் உயிரிழந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா நிவாரண நிதிக்காக கிரிக்கெட் வீரர்கள் பலரும் நன்கொடை அளித்துள்ளார்கள். இந்நிலையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து கரோனா தடுப்புப் பணிகளுக்காக கேட்டோ அமைப்பின் வழியாக ரூ. 7 கோடி நிதி திரட்டவுள்ளார். இதன் முதற்கட்டமாக இருவரும் இணைந்து ரூ. 2 கோடி வழங்கியுள்ளார்கள். 

முழு கட்டுரையைப் படிக்க →