செய்திகள்

இலங்கை ஒருநாள் அணி: ஐந்து வருடங்களில் ஒன்பது கேப்டன்கள்!

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை அணிக்குக் கிடைத்துள்ள 9-வது ஒருநாள் கேப்டன் அவர். 

DIN

இலங்கை ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

30 வயது குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்டுகள், 101 ஒருநாள், 47 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு குசால் பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 18 பேர் கொண்ட அணியில் மூன்று பேர் மட்டுமே 30 வயதைக் கடந்தவர்கள். அந்தளவுக்கு இளைஞர் பட்டாளம் ஒருநாள் தொடருக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டிமுத் கருணாரத்னே, ஏஞ்சலோ மேத்யூ, தினேஷ் சண்டிமல் ஆகிய மூத்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்பு இலங்கை ஒருநாள் அணியில் கேப்டனாக டிமுத் கருணாரத்னே இருந்தார். அவருடைய தலைமையில் இலங்கை அணி 10 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஏழு ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. 

சண்டிமல், மேத்யூஸ், மலிங்கா, திசாரா பெரேரா, உபுல் தரங்கா, லஹிரு திரிமனே, சமரா கபுகேடரா, கருணாரத்னே ஆகியோருக்கு அடுத்ததாகக் கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை அணிக்குக் கிடைத்துள்ள 9-வது ஒருநாள் கேப்டன் குசால் பெரேரா. இதற்கு முன்பு எந்த வகை கிரிக்கெட்டிலும் இலங்கை அணியின் கேப்டனாக அவர் இருந்ததில்லை.

மூன்று ஒருநாள் ஆட்டங்களும் டாக்காவில் மே 23, 25, 28 தேதிகளில் நடைபெறவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

சுந்தரனாா் பல்கலை.யின் நூலகத் துறையில் மாணவா் சோ்க்கை

தூத்துக்குடியில் ஐஸ் தயாரிப்பு கூடத்தில் அமோனியா வாயு கசிவு

SCROLL FOR NEXT