செய்திகள்

மே.இ. தீவுகள் சுற்றுப்பயணம்: ஆஸி. அணியில் பிரபல வீரருக்கு இடமில்லை!

மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

DIN


ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.

இந்தச் சுற்றுப்பயணத்துக்கான ஆரம்பக்கட்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் பிரபல வீரர் லபுசான் இடம்பெறவில்லை. இங்கிலாந்தில் கவுன்டி மற்றும் டி20 ஆட்டங்களில் விளையாடி வருவதால் அவரால் மே.இ. சுற்றுப்பயணத்தில் இடம்பெற முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கரோனா அச்சுறுத்தல் மட்டும் இல்லாவிட்டால் ஆஸி. ஒருநாள் அணியில் லபுசான் இடம்பிடித்திருப்பார். ஆஸ்திரேலிய அணிக்காக எதையும் செய்யக் கூடியவர். சூழல் காரணமாக அணியில் இடம்பெறாததால் அவர் மிகவும் வருத்தத்தில் உள்ளார். அணியில் இடம்பெறுவதற்கான எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்தோம். ஆனால் தற்போதைய நிலையில் அவர் இங்கிலாந்தில் இருப்பது தான் சரியாக இருக்கும் எனக் கருதினோம் என்று தேர்வுக்குழுத் தலைவர் டிரெவோர் ஹான்ஸ் கூறியுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் இடம்பெறாத ஸ்மித், ஸ்டார்க், ஹேசில்வுட், வார்னர், ஹென்ரிகஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் ஆகியோர் ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள். மேத்யூ வேட், ஸ்டாய்னிஸ், மிட்செல் மார்ஷ், டார்சி ஷார்ட், மிட்செல் ஸ்வப்சன், தன்வீர் சங்கா, ஆடம் ஸாம்பா ஆகியோருக்கும் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT