உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்திய அணியுடன் இணைந்தார் ஜடேஜா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இந்திய அணியுடன் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா மும்பையில் இணைந்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இந்திய அணியுடன் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜா மும்பையில் இணைந்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இந்திய வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த வாரம் ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், மயங்க் அகர்வால் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் மும்பை சென்றடைந்தனர்.
3 ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகே இந்திய வீரர்கள் மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த வீரர்கள் வரிசையில் தற்போது ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜாவும் மும்பையில் இந்திய அணியுடன் இணைந்து தனிமைப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து புறப்படும் முன் வீரர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.