செய்திகள்

ஐசிசி தரவரிசை: 2-வது, 3-வது இடத்தில் கோலி, ரோஹித்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

DIN


ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் சர்மா முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் உள்ளார்.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்களில் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் 18-வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சில் ஜாஸ்பிரீத் பூம்ரா தொடர்ந்து 5-வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சு தரவரிசையில் டிரென்ட் போல்ட் முதலிடத்தில் உள்ளார். வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹாசன் 725 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

ஆல்-ரௌண்டர்கள் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே முதல் 10 இடங்களில் இடம்பெற்று 9-வது இடத்தில் உள்ளார். இந்த தரவரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 396 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பென் ஸ்டோக்ஸ் 295 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT