அங்கிதா 
செய்திகள்

பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்று: இந்திய வீரர்கள் அனைவரும் வெளியேற்றம்!

பிரெஞ்சு ஓபன் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்கள். 

DIN

பிரெஞ்சு ஓபன் போட்டியின் தகுதிச்சுற்று ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்கள். 

இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டி, மே 30 அன்று பாரிஸ் நகரில் தொடங்கவுள்ளது. 

சுமித், பிரஜ்னேஷ், ராம்குமார், அங்கிதா ரெய்னா என நான்கு இந்தியர்கள் பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டியில் பங்கேற்றார்கள். இந்திய வீரரான பிரஜ்னேஷ், 2-6, 2-6 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஆஸ்கரிடம் முதல் ஆட்டத்திலேயே தோல்வியடைந்தார். எனினும் சுமித் நாகல், ராம்குமார், அங்கிதா ஆகியோர் முதல் முதல் தகுதிச்சுற்று ஆட்டங்களில் வெற்றி அடைந்தார்கள். எனினும் அடுத்த ஆட்டத்தில் மூவரும் தோல்வியைடைந்துள்ளார்கள். 

ஜெர்மனியின் கிரீட் மின்னனுக்கு எதிரான ஆட்டத்தில் 2-6, 0-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார் அங்கிதா. உஸ்பெகிஸ்தான் வீரரான டெனிஸிடம் 1-6, 2-6 என்ற நேர் செட்களில் ராம்குமாரும் தோல்வியடைந்தார். 

இந்தியாவின் நெ.1 வீரரான சுமித் நாகல், சிலியின் டபிலோவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் 3-6, 3-6 என்ற நேர் செட்களில் சுமித் நாகல் தோல்வியடைந்ததால் இந்த வருட பிரெஞ்சு ஓபன் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்திய அணியினரின் பங்களிப்பு இத்துடன் நிறைவுபெற்றது. நான்கு வீரர்களில் யாரும் முதல் சுற்றுக்குத் தகுதியடையாததால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது

கிராம நிா்வாக அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்

அமைதிப் பேச்சுவார்த்தை: உக்ரைனுக்கு ரஷியா அழைப்பு!

தொழிற்சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

SCROLL FOR NEXT