செய்திகள்

ஆர்சிபி அணிக்குப் புதிய பயிற்சியாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. 2016-ல் விராட் கோலி தலைமையில் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. 

ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த சைமன் கடிச், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து விலகினார். இதனால் அணியின் இயக்குநராக உள்ள மைக் ஹெஸ்ஸன், அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர், ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக அவர் பணியாற்றினார். 

2014 முதல் 2019 வரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் பணியாற்றியுள்ளார். 2015-ல் பஞ்சாப் ஐபிஎல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 2016 வரை பணியாற்றினார். 2001 முதல் 2004 வரை இந்திய அணிக்காக 12 டெஸ்டுகள், 15 ஒருநாள் ஆட்டங்களில் சஞ்சய் பங்கர் விளையாடியுள்ளார். 

புதிய பயிற்சியாளருக்கு அடுத்ததாக புதிய கேப்டனையும் தேர்வு செய்யவேண்டிய நிலைமையில் ஆர்சிபி அணி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT