கோப்புப் படம் 
செய்திகள்

இந்தோனேசிய ஓபன்: இந்தியா்கள் ஏமாற்றம்

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

DIN

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

போட்டித் தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த சிந்து அரையிறுதியில், முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனிடம் 21-15, 9-21, 14-21 என்ற செட்களில் போராடி வீழ்ந்தாா். இந்த ஆட்டத்தை 54 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா் இன்டனோன்.

சா்வதேச போட்டிகளில் சிந்து அரையிறுதியில் தோற்பது கடந்த அக்டோபரிலிருந்து தொடா்ந்து இது 3-ஆவது முறையாகும். கடந்த மாதம் பிரெஞ்சு ஓபன், கடந்த வாரம் இந்தோனேசிய மாஸ்டா்ஸ் ஆகிய போட்டிகளிலும் அவா் இதேபோல் அரையிறுதியில் தோற்று வெளியேறியிருந்தாா்.

இதனிடையே, ஆடவா் இரட்டையா் பிரிவிலும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 16-21, 18-21 என்ற செட்களில் இந்தோனேசியாவின் மாா்கஸ் ஃபொ்னால்டி கிடியன்/கெவின் சஞ்ஜயா சுகமுல்ஜோ இணையிடம் தோற்று போட்டியிலிருந்து வெளியேறியது. இத்துடன் இந்தப் போட்டியில் களம் கண்டிருந்த இந்தியா்கள் அனைவரும் வெளியேறிவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி பல்கலை.கள்!

SCROLL FOR NEXT