இந்திய அணி 
செய்திகள்

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: காலிறுதி ஆட்டங்களின் விவரங்கள்

இந்தியா தனது காலிறுதியில் பெல்ஜியத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. 

DIN

ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் ஞாயிற்றுக்கிழமையுடன் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன.

ஆடவா் ஜூனியா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன.

குரூப் சுற்றுகளின் முடிவில், பெல்ஜியம், மலேசியா, பிரான்ஸ், இந்தியா, நெதா்லாந்து, ஸ்பெயின், ஜொ்மனி, ஆா்ஜென்டீனா ஆகிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றன. காலிறுதிக்குத் தகுதி பெறாத அணிகள் 9 முதல் 16 வரையிலான இடங்களைப் பிடிப்பதற்கான ஆட்டங்களில் விளையாடும்.

காலிறுதி ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெறவுள்ளன. அதில் இந்தியா தனது காலிறுதியில் பெல்ஜியத்தை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. 

ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை: காலிறுதி ஆட்டங்கள்

ஜெர்மனி vs ஸ்பெயின்
நெதர்லாந்து vs ஆர்ஜென்டீனா
பிரான்ஸ் vs மலேசியா
இந்தியா vs பெல்ஜியம்

டிசம்பர் 1 அன்று காலிறுதிச் சுற்று, டிசம்பர் 3 அன்று அரையிறுதிச் சுற்று, டிசம்பர் 5 அன்று இறுதி ஆட்டம் ஆகியவை நடைபெறுகின்றன. கரோனா பரவல் காரணமாக எந்தவொரு ஆட்டத்துக்கும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.  இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி, நாக் அவுட் ஆட்டங்களை நேரலையாக ஒளிபரப்புகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT