செய்திகள்

சஹாவுக்கு என்ன ஆச்சு?: பிசிசிஐ விளக்கம்

பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

DIN

கழுத்தில் வலி உள்ளதால் சஹாவால் முதல் டெஸ்டின் கடைசி நாளிலும் விக்கெட் கீப்பிங் பணிகளில் ஈடுபட முடியவில்லை என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

இந்திய விக்கெட் கீப்பர் சஹாவுக்குக் கழுத்தில் வலி உள்ளதால் அவரால் விக்கெட் கீப்பிங் பணியில் ஈடுபட முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் சஹாவுக்குப் பதிலாக பரத் விக்கெட் கீப்பராகச் செயல்பட்டார். இந்திய அணியின் 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்த சஹா, அரை சதமெடுத்து இந்திய அணிக்குப் பெரிதும் உதவினார். நியூசிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் சில ஓவர்கள் மட்டுமே விக்கெட் கீப்பிங் பணிகளில் சஹா ஈடுபட்டார். பிறகு விக்கெட் கீப்பராக பரத் மீண்டும் செயல்பட்டார். 5-வது நாளான இன்றும் பரத் தான் விக்கெட் கீப்பராகச் செயல்படுகிறார். இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

2-வது இன்னிங்ஸில் சஹாவுக்குக் கழுத்தில் வலி ஏற்பட்டது. அதனால் விக்கெட் கீப்பிங் பணியில் நகர்வதில் அவருக்குப் பிரச்னை இருந்தது. சஹாவுக்குப் பதிலாக 5-ம் நாளில் பரத் விக்கெட் கீப்பராகச் செயல்படுவார் என்று ட்விட்டரில் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“H FILES” ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல்காந்தி!

600 பேருக்கு வேலைவாய்ப்பு! வேலூரில் மினி டைடல் பூங்கா திறப்பு!

ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

பிக் பாஸ் 9 நேரலையும் எடிட் செய்யப்படுகிறதா?

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

SCROLL FOR NEXT