பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் 
செய்திகள்

முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. 

DIN

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது பாகிஸ்தான் அணி. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்றில் வங்கதேச அணி விளையாடிய 5 ஆட்டங்களிலும் தோற்றது. அடுத்ததாக, சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 டி20, 2 டெஸ்ட் ஆட்டங்களில் அந்த அணி விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது பாகிஸ்தான் அணி. நவம்பர் 26 முதல் டெஸ்ட் தொடர் தொடங்கியது.

வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 330 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும் 2-வது இன்னிங்ஸில் வங்கதேசத்தை 157 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இதனால் முதல் டெஸ்டில் வெற்றி பெற பாகிஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி, 58.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபித் அலி 91 ரன்களும் அப்துல்லா ஷஃபிக் 73 ரன்களும் எடுத்தார்கள். இதனால் முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ள பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. அபித் அலி, ஆட்ட நாயகனாகத் தேர்வானார். 

2-வது டெஸ்ட், டிசம்பர் 4 அன்று தொடங்குகிறது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT