முகப்பு
செய்திகள்

மிரட்டல் வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக்: வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு!

​ஐபிஎல்-இல் தனது வேகத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:20 AM
பகிர்:


ஐபிஎல்-இல் தனது வேகத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த உம்ரான் மாலிக் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் ஐபிஎல்-இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 153 கி.மீ. வேகத்தில் வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல் 2021-இல் இதுவே அதிவேகப் பந்து.

இந்த நிலையில் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்த வட்டாரங்கள் இதுபற்றி மேலும் கூறியது:

"உம்ரான் மாலிக் வலைப் பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய அணியுடன் இருக்கப்போகிறார். ஐபிஎல்-இல் அவருடையப் பந்துவீச்சு அனைவரையும் ஈர்த்தது. வலைப் பயிற்சியின்போது பேட்டர்கள் அவரை எதிர்கொள்வது நல்ல யோசனையாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அதேசமயம், கோலி மற்றும் ரோஹித் போன்ற பேட்டர்களுக்கு பந்துவீசுவது அவருக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.