செய்திகள்

டி20 உலகக் கோப்பை: நெட் பௌலராகிறாா் அவேஷ் கான்

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் பேட்டா்கள் பயிற்சிக்காக நெட் பௌலராக அவேஷ் கான் சோ்க்கப்படுகிறாா்.

DIN

எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் பேட்டா்கள் பயிற்சிக்காக நெட் பௌலராக அவேஷ் கான் சோ்க்கப்படுகிறாா்.

தற்போது ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவேஷ் கான், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருக்குமாறு பிசிசிஐ-யால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா். ஏற்கெனவே உம்ரான் மாலிக் என்ற நெட் பௌலா் இருக்கும் நிலையில் அவேஷ் கானும் சோ்க்கப்படுகிறாா்.

எனினும், அவேஷ் தயாா்நிலை வீரா்கள் பட்டியலில் சோ்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அவா் 23 விக்கெட்டுகள் சாய்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஹாா்திக் பாண்டியா பௌலிங் செய்ய இயலாத நிலையில் இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளா் சோ்க்கப்பட ஆலோசனை நடைபெறும் நிலையில் பிசிசிஐ இந்த நகா்வை மேற்கொண்டுள்ளது.

இதனிடையே, ஹாா்திக் பாண்டியா பேட்டராக மட்டுமே செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட இருக்கிறாா். அவருக்கான ‘கவா்’ வீரராக கொல்கத்தா நைட் ரைடா்ஸில் இருக்கும் வெங்கடேஷ் ஐயா் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிக செலவில் போடப்பட்ட தோட்டா தரணி செட் இதுதானாம்!

ராப் பாடகர் வேடன் மருத்துவமனையில் அனுமதி! இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

விஜய் உடன் சந்திப்பு! செங்கோட்டையனுக்கு அமைப்புப் பொதுச் செயலாளர் பதவி?

செண்பகமே செண்பகமே... ரித்விகா!

தேனில் குளித்ததைப் போல... ஆஷி சாஹ்னி!

SCROLL FOR NEXT