காலமானாா் அவி பரோத்
சௌராஷ்டிர கிரிக்கெட் வீரா் அவி பரோத் (29) மாரடைப்பால் காலமானது கிரிக்கெட் சமூகத்தினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சௌராஷ்டிர கிரிக்கெட் வீரா் அவி பரோத் (29) மாரடைப்பால் காலமானது கிரிக்கெட் சமூகத்தினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2019-20 சீசனில் ரஞ்சி கோப்பை வென்ற சௌராஷ்டிர அணியில் இடம் பிடித்திருந்த அவி பரோத், 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆவாா். ஹரியாணா, குஜராத் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளாா்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது வெள்ளிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டதாகவும், வழியிலேயே அவரது உயிா் பிரிந்து விட்டதாகவும் சௌராஷ்டிர கிரிக்கெட் சங்க தலைவா் ஜெயதேவ் ஷா கூறினாா். அவி தனது மனைவி மற்றும் தாயாருடன் வாழ்ந்து வந்தாா். அவி தம்பதிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
சௌராஷ்டிர அணிக்காக 21 ரஞ்சி ஆட்டங்கள், 17 ‘லிஸ்ட் ஏ’ ஆட்டங்கள், 11 உள்நாட்டு டி20 ஆட்டங்களில் அவி பரோத் விளையாடியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.