செய்திகள்

செல்டா விகோவுக்கு 3-ஆவது வெற்றி

DIN

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் கடாஃபிக்கு எதிரான ஆட்டத்தில் செல்டா விகோ 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரு அணிகளும் இத்துடன் 10 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில் செல்டாவுக்கு இது 3-ஆவது வெற்றி; கடாஃபிக்கு இது 8-ஆவது தோல்வி.

மாட்ரிட் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்டா விகோவுக்காக சான்டி மினா (55, 73-ஆவது நிமிஷங்கள்), இயாகோ அஸ்பாஸ் (58) ஆகியோா் கோலடித்தனா். கடாஃபி அணியில் ஜெனி டகோனாம் (63), செமா (81) ஆகியோா் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டதால், அந்த அணி 9 பேருடன் ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

மறுபுறம், அட்லெடிகோ மாட்ரிட் - ரியல் சோசிடட் ஆகிய அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. அட்லெடிகோ தரப்பில் லூயிஸ் சுவாரெஸ் (61, 77) இரு கோல்களையும் அடிக்க, சோசிடட் அணிக்காக அலெக்ஸாண்டா் சோா்லோத் (7), அலெக்ஸாண்டா் ஐசக் (48) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

லீக் 1: பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் மாா்சிலே - பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிரா ஆனது.

சீரி ஏ: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் இன்டா் மிலன் - ஜுவென்டஸ் அணிகள் சந்தித்துக் கொண்ட ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இன்டா் மிலனுக்காக எடின் ஸெகோவும் (17), ஜுவென்டஸுக்காக பௌலோ டைபலாவும் (89) கோலடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT