முகப்பு
செய்திகள்

டி20 கிரிக்கெட் : 11,000 ரன்களைக் கடந்து 2-ஆம் இடம் பிடித்த பொலார்ட் 

மேற்கிந்திய அணியைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் கைரன் பொலார்ட்  டி20 கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ரன்களைக் கடந்த 2வது வீரராக சாதனை படைத்திருக்கிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
கேப்டன் பொலார்ட் (கோப்புப் படம்)
பகிர்:

மேற்கிந்திய அணியைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் கைரன் பொலார்ட் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ரன்களைக் கடந்த 2வது வீரராக சாதனை படைத்திருக்கிறார்.

டி20 கரிபியன் பிரிமியர் லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில் நேற்று (ஆக-31) டிரின்பகோ நைட் ரைடர்ஸ் சார்பில் களமிறங்கிய பொலார்ட் 41 ரன்களை அடித்த நிலையில் அதிவேகமாக 11,000 ரன்களைக் கடந்த இரண்டாவது  பேட்ஸ்மேனாக மாறியுள்ளார்.

முன்னதாக அதே மேற்கிந்திய அணியைச் சேர்ந்த கிறிஸ் கைல் 14,108 ரன்களைக் குவித்து முதலிடத்தில் இருக்கிறார்.  இரண்டாவது பொலார்ட் , மூன்றாம் இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த சோயிப் மாலிக் , நான்காம் இடத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர் ஆகியோர் அதிக ரன்களைக் குவித்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள்.

மேலும் சிறந்த ஆல்-ரவுண்டரான கைரன் பொலார்ட் இதுவரை டி20 போட்டிகளில் 11,000 ரன்களைக்  குவித்ததோடு 297 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →