இங்கிலாந்தின் 140 ஆண்டு டெஸ்ட் வரலாற்றில் ஷர்துல் தாக்குர் நிகழ்த்திய சாதனை!
இங்கிலாந்தில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த பெருமையை இதற்கு முன்பு...
இங்கிலாந்தில் 140 ஆண்டுகளுக்கு மேலாக டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் 1880-ல் லண்டன் ஓவல் மைதானத்தில் தான் முதல் டெஸ்ட் நடைபெற்றது.
முதல்தர கிரிக்கெட்டில் 16 ரன்கள் மட்டுமே பேட்டிங் சராசரியைக் கொண்டுள்ள ஷர்துல் தாக்குர், இங்கிலாந்தில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த பெருமையை இதற்கு முன்பு ஐயன் போத்தம் வைத்திருந்தார். 1986-ல் நியூசிலாந்துக்கு எதிராக 32 பந்துகளில் அரை சதம் எடுத்தார். அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் ஷர்துல் தாக்குர்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்டில் 31 பந்துகளில் அரை சதம் எடுத்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். நூறு ஆண்டு வரலாறு கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்தவர் என்கிற பெருமையை ஷர்துல் தாக்குர் அடைந்துள்ளார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக குறைந்த பந்துகளில் எடுக்கப்பட்ட அரை சதங்களில் ஷர்துல் தாக்குருக்கு 3-வது இடம். இந்திய வீரர்களில் கபில் தேவ் 1982-ல் 30 பந்துகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அரை சதம் எடுத்ததே இன்று வரை சாதனையாக உள்ளது. 31 பந்துகளில் அரை சதம் எடுத்த ஷர்துல் தாக்குருக்கு 2-வது இடம்.
இந்திய அணி எதிர்பார்த்த ஒரு ஆல்ரவுண்டராக வளர்ந்து வருகிறார் ஷர்துல் தாக்குர். இதனால் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.