செய்திகள்

ரசிகர்களுக்குப் பறக்கும் முத்தங்கள்: முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு நுழைந்த 18 வயது லேலா (விடியோ)

DIN

யு.எஸ். ஓபன் போட்டியில் பிரபல வீராங்கனை கெர்பரை வீழ்த்தி முதல்முறையாக  கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு நுழைந்தார் கனடாவின் லேலா.

தரவரிசையில் 73-ம் இடத்தில் உள்ள லேலா, 4-வது சுற்றில் பிரபல வீராங்கனையும் 2016 யு.எஸ். ஓபன் சாம்பியனுமான ஜெர்மனியைச் சேர்ந்த கெர்பரை எதிர்கொண்டார். 3-வது சுற்றில் ஒசாகாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்த லேலா, இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி  4-6, 7-6(5), 6-2 என வென்று முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு முன்னேறினார். 

ஆட்டம் முடிந்த பிறகு அரங்கில் லேலா கூறியதாவது: ரசிகர்கள் எனக்கு நன்கு ஆதரவு தருகிறார்கள், என்னை ஊக்கப்படுத்துகிறார்கள். அடுத்த ஆட்டம் கடினமாக இருக்கும்.  ஸ்விடோலினா மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவார். ரசிகர்கள் எனக்கு மீண்டும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன் என்று கூறி அரங்கில் இருந்த ரசிகர்களுக்குப் பறக்கும் முத்தங்களை அளித்தார். 

காலிறுதியில் உலகின் நெ.5 வீராங்கனையான உக்ரைனைச் சேர்ந்த எலினா ஸ்விடோலினாவுடன் மோதுகிறார். 

ஆட்டத்தின் ஹைலைட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT