முகப்பு
செய்திகள்

சவாலைக் கடந்து வெற்றி பெறும் அணி எது?: லண்டன் டெஸ்ட் 4-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

10 விக்கெட் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெல்ல 291 ரன்கள் தேவைப்படுகிறது...

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
ஷர்துல் - ரிஷப் பந்த்
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் தடுமாற்றமாக விளையாடி 61.3 ஓவர்களில் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் 57, கோலி 50 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 84 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போப் 81 ரன்களும் வோக்ஸ் 50 ரன்களும் எடுத்தார்கள். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 466 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 127, புஜாரா 61, ஷர்துல் தாக்குர் 60, ரிஷப் பந்த் 50 ரன்கள் எடுத்தார்கள். வோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

4-வது டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 4-ம் நாள் முடிவில் 32 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது. பர்ன்ஸ் 31, ஹசீப் ஹமீத் 43 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். கடைசி நாளில் 10 விக்கெட் மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி வெல்ல 291 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.