5-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு: இரு வீரர்கள் சேர்ப்பு
5-வது டெஸ்ட், செப்டம்பர் 10 அன்று மான்செஸ்டரில் தொடங்குகிறது.
இந்தியாவுக்கு எதிராக 5-வது டெஸ்டில் விளையாடவுள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 4-வது டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி கடைசி நாளில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. ரோஹித் சர்மா, ஆட்ட நாயகனாகத் தேர்வானார்.
5-வது டெஸ்ட், செப்டம்பர் 10 அன்று மான்செஸ்டரில் தொடங்குகிறது. இந்நிலையில் 5-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லரும் சுழற்பந்து வீச்சாளர் ஜேக் லீச்சும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். 4-வது டெஸ்டில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த சாம் பில்லிங்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். நேற்று, பேட்டிங்கின்போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஓவர்டன், இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.
5-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணி
ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, பர்ன்ஸ், பட்லர், சாம் கரண், ஹசீப் ஹமீது, லாரன்ஸ், ஜேக் லீச், டேவிட் மலான், ஓவர்டன், போப், ராபின்சன், வோக்ஸ், மார்க் வுட்.