முகப்பு
செய்திகள்

டி20 தரவரிசை: ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடம்

டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடம் வகிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

டி20 தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடம் வகிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

மகளிர் டி20 தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஷஃபாலி வர்மா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

17 வயது ஷஃபாலி கடந்த வருடம் டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தார். அதிலிருந்து தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இதுவரை 25 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஷஃபாலி வர்மா, 3 அரை சதங்களுடன் 159 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 145.19. டி20 தரவரிசையில் இந்தியாவின் மந்தனா 3-ம் இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்களில் இந்தியாவின் தீப்தி சர்மா 6-ம் இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் தீப்தி சர்மா, 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

டி20 ஆட்டங்களுக்காகப் புகழ்பெற்ற ஷஃபாலி வர்மா, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்களில் அறிமுகம் ஆனார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →