முகப்பு
செய்திகள்

5 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் செல்லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

​பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்துக்கு சென்று டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:08 AM
கோப்புப்படம்
பகிர்:


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசத்துக்கு சென்று டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதை செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை நவம்பர் 14-ம் தேதி நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உடனடியாக வங்கதேசம் செல்லுகிறது. அங்கு 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர்களில் பாகிஸ்தான் விளையாடுகிறது.

மே 2015-க்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசம் செல்வது இதுவே முதன்முறை.

டி20 அட்டவணை:

முதல் டி20 - நவம்பர் 19
இரண்டாவது டி20 - நவம்பர் 20
மூன்றாவது டி20 - நவம்பர் 22
 
டெஸ்ட் அட்டவணை:

முதல் டெஸ்ட் - நவம்பர் 26-30
இரண்டாவது டெஸ்ட் - டிசம்பர் 4-8

முழு கட்டுரையைப் படிக்க →