செய்திகள்

உங்கள் பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும்: மலிங்காவுக்குக் குவியும் வாழ்த்து

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு பெற்றதையடுத்து, ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா மற்றும் மகிளா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

DIN


இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா ஓய்வு பெற்றதையடுத்து, ஜாம்பவான்கள் குமார் சங்கக்காரா மற்றும் மகிளா ஜெயவர்தனே வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வேகப்பந்துவீச்சாளராக வலம் வந்தவர் லசித் மலிங்கா. இவரது தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2014-இல் டி20 உலகக் கோப்பையை வென்றது. 2011-இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக மலிங்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

சங்கக்காரா ட்வீட்:

"சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள். இலங்கை கிரிக்கெட்டுக்கும், சர்வதேச கிரிக்கெட்டும் அளித்த உங்களது பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும். உங்களுடன் விளையாடியதில் மகிழ்ச்சி. இப்போதிலிருந்து நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு வாழ்த்துகள். கொடுப்பதற்கு நிறைய அறிவு இருக்கிறது. ஜாம்பவான்."

ஜெயவர்தனே ட்வீட்:

"18 வயது வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக வண்ணம் தீட்டப்பட்ட சுருண்ட முடியுடன் காலேவில் முதன்முறையாக எதிர்கொண்டது சுவாரஸ்ய நினைவுகளைத் தருகிறது. அணியில் அற்புதமான வீரர். வாழ்த்துகள் நண்பா. நன்றி!!"

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT