முகப்பு
செய்திகள்

22 வயதுக்கு முன்பு 200 விக்கெட்டுகளை எடுத்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்

பாகிஸ்தான் அணிக்காக 2018 முதல் விளையாடி வரும் ஷாஹீன் அப்ரிடி, இதுவரை 24 டெஸ்டுகள், 30 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

பாகிஸ்தான் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி இன்று தனது 22-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

பாகிஸ்தான் அணிக்காக 2018 முதல் விளையாடி வரும் ஷாஹீன் அப்ரிடி, இதுவரை 24 டெஸ்டுகள், 30 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

டெஸ்டில் 95 விக்கெட்டுகளும் ஒருநாள் கிரிக்கெட்டில் 59 விக்கெட்டுகளும் டி20யில் 47 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 22 வயது முடிவதற்குள் 200 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

இதேபோல 22 வயது முடிவதற்குள் 200+ விக்கெட்டுகளை எடுத்த கிரிக்கெட் வீரர்கள்

வக்கார் யூனுஸ் (பாகிஸ்தான்) - 249 விக்கெட்டுகள் (115 இன்னிங்ஸ்)
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) - 245 விக்கெட்டுகள் (122 இன்னிங்ஸ்)
சக்லைன் முஷ்டாக் (பாகிஸ்தான்) - 241 விக்கெட்டுகள் (114 இன்னிங்ஸ்)
இர்பான் பதான் (இந்தியா) - 203 விக்கெட்டுகள் (115 இன்னிங்ஸ்)
ஷாஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) - 201 விக்கெட்டுகள் (109 இன்னிங்ஸ்)

முழு கட்டுரையைப் படிக்க →