மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் இன்றைய (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் பாப் டு பிளெஸ்ஸி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தன.
தொடர்ந்து, களமிறக்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரரான டு பிளெஸ்ஸி நிதானமாக ஆட மறுமுனையில் அனுஜ் ராவத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
9வது ஓவரில் பிளெஸ்ஸி அவுட்டாக, அனுஜுடன் இணைந்த கோலியும் அதிரடியை தொடர்ந்தார்.
6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் குவித்த அனுஜ்(47 பந்துகள்) 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 5 பவுண்டரிகளுடன் 48 ரன்கள்(36 பந்துகள்) சேர்த்த கோலி 19வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 18.3 ஓவரில் வெற்றிக்கு தேவையான 152 ரன்களை பெங்களூரு அணி எட்டியது.
ஒரு சிக்ஸருடன் தினேஷ் கார்த்திக் 7 ரன்களும், இரண்டு பவுண்டரிகளுடன் மேக்ஸ்வெல் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்று பெற்ற பெங்களூரு அணி மொத்தம் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.