செய்திகள்

2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள்: ஐசிசி அறிவிப்பு

2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

DIN

2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.

துபையில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் 2024 டி20 உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டிக்கு 12 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த வருடம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் 8 அணிகள் அடுத்த உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறும். போட்டியை நடத்தும் நாடுகளான அமெரிக்காவும் மேற்கிந்தியத் தீவுகளும் நேரடித் தகுதியை அடைந்துள்ளன.  மீதமுள்ள இரு அணிகள், தரவரிசையின் அடிப்படையில் தேர்வாகும். 

ஒருவேளை மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் 8 இடங்களில் இடம்பெற்றுவிட்டால், தரவரிசையின் அடிப்படையில் மூன்று அணிகள் தேர்வு செய்யப்படும். இதர 8 அணிகளும் தகுதிச்சுற்றின் அடிப்படையில் தேர்வாகவுள்ளன. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 20 அணிகள் பங்கேற்கவிருப்பது இதுவே முதல்முறை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT