செய்திகள்

சர்வதேச செஸ் போட்டியை வென்ற இளம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, ரேகவிக் ஓபன் சர்வதேச செஸ் போட்டியை வென்றுள்ளார்.

DIN

இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா, ரேகவிக் ஓபன் சர்வதேச செஸ் போட்டியை வென்றுள்ளார்.

சமீபத்தில், இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தா. இதனால் அவருக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தன. விஸ்வநாதன் ஆனந்த், ஹரிகிரிஷ்ணா, பிரக்ஞானந்தா என மூன்று இந்தியர்கள் மட்டுமே இதுவரை கார்ல்சனைத் தோற்கடித்துள்ளார்கள். கார்ல்சனைத் தோற்கடித்த இளம் வீரர் என்கிற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றார்.

இந்நிலையில்ரேகவிக் (Reykjavik) ஓபன் என்கிற சர்வதேச செஸ் போட்டியை பிரக்ஞானந்தா வென்றுள்ளார். இறுதிச்சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த குகேஷை வென்று 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகள் பெற்று வெற்றியாளர் ஆனார். இந்தப் போட்டியில் 4 சுற்றுகளில் வெற்றிகளைப் பெற்ற பிரக்ஞானந்தாவை யாராலும் தோற்கடிக்க முடியவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT