செய்திகள்

ஆசிய பாட்மின்டன்: பி.வி. சிந்துவுக்கு வெண்கலம்

DIN


ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆசிய பாட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பி.வி. சிந்து ஜப்பானின் அகேன் யெமகுச்சியை எதிர்கொண்டார். முதல் கேமில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-13 என்ற கணக்கில் கேமை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டிலும் அதே ஆதிக்கத்தைத் தொடர்ந்த சிந்து முன்னிலை வகித்து வந்தார். ஆனால், சிந்து சர்வ் போட நிறைய நேரம் எடுத்துக்கொள்வதாக நடுவர் குற்றம்சாட்டினார். இதனால், சற்று வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்பிறகு, சிந்துவால் முன்னிலையை நீட்டிக்க முடியவில்லை. இரண்டாவது கேமை 19-21 என்ற கணக்கில் யெமகுச்சியிடம் இழந்தார் சிந்து. வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் யெமகுச்சி தொடக்கம் முதலே முன்னிலை வகிக்கத் தொடங்கிவிட்டார். சிந்து சற்று போராட்ட குணத்தை வெளிப்படுத்தியபோதிலும், இறுதியில் யெமகுச்சி 21-16 என்ற கணக்கில் 3-வது கேமை கைப்பற்றி வெற்றி பெற்றார்.

21-13, 19-21, 16-21 என்கிற கேம் கணக்கில் அரையிறுதியில் தோல்வியடைந்த பி.வி. சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT