செய்திகள்

பளுதூக்குதலில் இந்தியாவுக்கு 3ஆவது தங்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு, பளுதூக்குதலில் மேலும் ஒரு தங்கமும், ஜூடோவில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலமும் கிடைத்துள்ளன. 

DIN

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு, பளுதூக்குதலில் மேலும் ஒரு தங்கமும், ஜூடோவில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலமும் கிடைத்துள்ளன. 

இத்துடன் இந்தியா, 3 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 

இதில் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் பளுதூக்குதலில் கிடைத்தவையாகும். 
பளுதூக்குதல்: இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆடவருக்கான 73 கிலோ பளுதூக்குதலில் இந்தியாவின் அசிந்தா ஷியுலி, ஸ்னாட்சில் 143 கிலோ, கிளீன் & ஜெர்க்கில் 170 கிலோ என மொத்தமாக 313 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்தார். அவர் ஸ்னாட்ச் பிரிவில் தூக்கிய 143 கிலோவும், ஒட்டுமொத்த எடையான 313 கிலோவும் காமன்வெல்த் போட்டி சாதனைகளாகும். மலேசியாவின் எர்ரி ஹிதாயத் முகமது 303 கிலோவுடன் (138+165) வெள்ளியை வெல்ல, கனடாவின் ஷாத் டார்சிக்னி 298 கிலோவுடன் (135+163) வெண்கலப் பதக்கம் பெற்றார். 

நூலிழையில்...: 

ஆடவருக்கான 81 கிலோ பிரிவில் இந்தியரான அஜய் சிங், 1 கிலோ வித்தியாசத்தில் வெண்கலப் பதக்க வாய்ப்பைத் தவறவிட்டார். அவர் 319 கிலோ எடையைத் தூக்கி (143+176) நான்காம் இடம் பிடித்தார். மகளிருக்கான 59 கிலோ பிரிவில் களம் கண்ட பாபி ஹஸôரிகா, 183 கிலோவுடன் (81+102) ஏழாம் இடமே 
பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அமைச்சர் கலந்துகொண்ட காலநிலை மாநாட்டு அரங்கில் தீ விபத்து! பலர் காயம்!

பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா பயணம்!

வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி ஆய்வு

ஏரியில் மூதாட்டி சடலம்

யூரியா சட்டவிரோதமாக பதுக்கல்: கிட்டங்கிக்கு சீல்

SCROLL FOR NEXT