முகப்பு
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: ஆடவர் ஏ அணி ஹரிகிருஷ்ணா வெற்றி

நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரின் 6வது சுற்றில் இந்திய ஆடவர் ஏ அணியில் இடம் பெற்றுள்ள ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
பகிர்:


நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரின் 6வது சுற்றில் இந்திய ஆடவர் ஏ அணியில் இடம் பெற்றுள்ள ஹரிகிருஷ்ணா வெற்றி பெற்றார். 

கருப்பு நிறக் காய்களுடன் விளையாடிய ஹரிகிருஷ்ணா, உஸ்பெகிஸ்தான் வீரர் அப்துசத்தோரோவ் நோடிர்பெக்கை 34 வது நகர்த்தலில் வென்றார். 

இதற்கு முன்பு நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், தமிழக வீரர் குகேஷ், ஆர்மேனிய வீரர் கேப்ரியல் சர்கிசியனை 41வது நகர்வில் வீழ்த்தினார். 

சென்னைக்கு அருகேவுள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்ற்ன. ஆகஸ்ட் 10 வரை செஸ் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனா். 

சர்வதேச செஸ் சம்மேளனம் (ஃபிடே), அகில இந்திய செஸ் சம்மேளனம் (ஏஐசிஎஃப்), தமிழ்நாடு அரசு இணைந்து முதன்முறையாக இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துகின்றன. இதனால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →