பஜ்ரங் புனியா 
செய்திகள்

காமன்வெல்த்: மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா

காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். 

DIN

காமன்வெல்த் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தங்கப் பதக்கம் வென்றார். 

ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மெக்னிலை வீழ்த்தி  தங்கப் பதக்கம் வென்றார். அவர் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் லச்லானை வீழ்த்தினார். 

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடப்பாண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 8வது நாளான இன்று இந்திய வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர். அந்த வகையில் மல்யுத்தப் போட்டிகளும் இன்று நடைபெற்றன.

இதில், ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நட்சத்திர மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா கனடா நாட்டைச் சேர்ந்த லச்லான் மெக்னிலுடன் மோதினார். இதில் 4-0 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார். 

இதேபோன்று 57 கிலோ எடைப் பிரிவில் (ஃப்ரீ ஸ்டைல்) இறுதி போட்டியில் இந்தியாவின் அன்ஷு மாலிக், நைஜீரியாவின் ஓடுனயோ ஃபோலசடேவுடன் மோதினார். இந்த போட்டியில் அன்ஷு மாலிக் 4-6 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார்.

மேலும், பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவிலான மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கப் பதக்கம் வென்றார். 

இதன் மூலம், இந்திய அணி 8 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

கடைசி நாளில் இங்கிலாந்து அணி பயந்துவிட்டது: இங்கிலாந்து முன்னாள் கேப்டன்

மகனாக நடித்தவரை திருமணம் செய்துகொண்ட சீரியல் நடிகை!

SCROLL FOR NEXT