செய்திகள்

டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக: சாதனை படைத்த இந்தியப் பந்துவீச்சாளர்கள்

DIN


மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 5-வது டி20யையும் டி20 தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது.

லாடர்ஹில்லில் நடைபெற்ற 5-வது டி20யில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், புவனேஸ்வர் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். ஹார்திக் பாண்டியா கேப்டனாகச் செயல்பட்டார். இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 64 ரன்களும் தீபக் ஹூடா 38 ரன்களும் எடுத்தார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணி, 15.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஹெட்மையர் 56 ரன்கள் எடுத்தார். பிஷ்னாய் 4 விக்கெட்டுகளும் அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

டி20 தொடரை இந்திய அணி 4-1 என வென்றது. அக்‌ஷர் படேல் ஆட்ட நாயகனாகவும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள். 

5-வது டி20யில் மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்களின் அனைத்து விக்கெட்டுகளும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தினார்கள். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுபோல எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்துவது இதுவே முதல்முறை. இதன்மூலம் பிஷ்னாய், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவரும் சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT