செய்திகள்

லெஜண்ட்ஸ் லீக்: கங்குலி தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

DIN

மூத்த வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் போட்டி இந்த வருடம் கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்துடன் தொடங்கவுள்ளது. 

இப்போட்டிக்காக கங்குலி தலைமையில் விளையாடும் இந்திய மஹாராஜாஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடப் போட்டி இந்தியாவின் 75-வது சுதந்திர தின நிறைவு விழாவுக்கான அர்ப்பணிப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட ஜனவரியில் ஓமனில் நடைபெற்ற முதல் பருவத்தில் லயன்ஸ் - ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிச்சுற்றில் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. 2-வது பருவத்தில்  4 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 15 ஆட்டங்கள். 

இந்திய மூத்த வீரர்களின் அணி இந்திய மஹாராஜாஸ் என்று அழைக்கப்படுகிறது. கங்குலி தலைமையிலான மஹாராஜாஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 அன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய மஹாராஜாஸ் - இயன் மார்கன் தலைமையிலான வேர்ல்டு ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ளன. 

கங்குலி தலைமையிலான இந்திய மஹாராஜாஸ் அணியில் சேவாக், யூசுப் பதான், இர்ஃபான் பதான், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், அஜய் ஜடேஜா போன்ற பிரபலவீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்திய மஹாராஜாஸ் அணி

கங்குலி (கேப்டன்), சேவாக், முகமது கைஃப், யூசுஃப் பதான், பத்ரிநாத், இர்ஃபான் பதான், பார்தீவ் படேல் (விக்கெட் கீப்பர்), ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், நமன் ஓஜா (விக்கெட் கீப்பர்), அசோக் டிண்டா, பிரக்யான் ஓஹா, அஜய் ஜடேஜா, ஆர்பி சிங், ஜொகிந்தர் சர்மா, ரீதிந்தர் சிங் சோதி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT