செய்திகள்

ஆசியக் கோப்பை டி20: ஷாஹீன் அப்ரிடிக்குப் பதிலாக புதிய வீரர் தேர்வு

ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து விலகிய ஷாஹீன் அப்ரிடிக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியில் புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து விலகிய ஷாஹீன் அப்ரிடிக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியில் புதிய வீரர் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

காயம் காரணமாக ஆசியக் கோப்பை டி20 போட்டியிலிருந்து ஷாஹீன் அப்ரிடி விலகியுள்ளார். இலங்கையில் டெஸ்ட் தொடரில் விளையாடியபோது ஷாஹீன் அப்ரிடிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் இன்னும் குணமாகாததால் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் மட்டுமல்லாமல் இங்கிலாந்துத் தொடரிலிருந்தும் அவர் விலகியுள்ளார். இதற்கடுத்ததாக டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு நியூசிலாந்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 போட்டியில் ஷாஹீன் அப்ரிடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடிக்குப் பதிலாக பாகிஸ்தான் அணியில் முகமது ஹஸ்நைன் சேர்க்கப்பட்டுள்ளார்.  22 வயது ஹஸ்நைன், 8 ஒருநாள், 18 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாகக் கடந்த டிசம்பர் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

தேனிலவுக் கொலை வழக்கு: 790 பக்க குற்றப்பத்திரிகை! | Honeymoon murder

தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையத்தில் வேலை வேண்டுமா?

செங்கோட்டையன் பதவிப் பறிப்பு - சர்வாதிகார உச்சநிலை! ஓபிஎஸ் காட்டம்!

நீட் தேர்வு கலந்தாய்வில் மோசடி: 11 தேர்வர்கள் மீது வழக்குப்பதிவு!

SCROLL FOR NEXT