செய்திகள்

ராகுல் டிராவிடுக்கு கரோனா: இந்திய அணியின் நிலை பற்றி பிசிசிஐ அறிவிப்பு

ஆசியக் கோப்பையில் கலந்துகொள்வதற்காக இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில்...

DIN

கரோனாவிலிருந்து மீண்ட பிறகு இந்திய அணியினருடன் ராகுல் டிராவிட் இணைந்து கொள்வார் என பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என முழுமையாக வென்றுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் செயல்பட்டார். தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. 

இந்த வாரம் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினருடன் இணைந்து துபை செல்லவிருந்தார் டிராவிட். இந்நிலையில் கரோனாவால் டிராவிட் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை பிசிசிஐ இன்று உறுதி செய்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஆசியக் கோப்பையில் கலந்துகொள்வதற்காக இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் ராகுல் டிராவிட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. பிசிசிஐயின் மருத்துவக் குழு டிராவிடைக் கண்காணித்து வருகிறது. கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பிறகு அணியினருடன் அவர் இணைந்துகொள்வார். அணியைச் சேர்ந்த மற்றவர்கள் ஆகஸ்ட் 23 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒன்று கூடுவார்கள் என்று பிசிசிஐயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

முதல்முறையாக புதுவையில் விஜய் சாலைவலம்! எப்போது?

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

SCROLL FOR NEXT