செய்திகள்

அபுதாபி மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுன் எரிகைசி சாம்பியன்

இந்திய கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி, 28-ஆவது அபுதாபி மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றாா்.

DIN

இந்திய கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி, 28-ஆவது அபுதாபி மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றாா்.

9-ஆவது மற்றும் இறுதிச்சுற்றில் ஸ்பெயினின் டேவிட் அன்டன் குய்ஜரோவை வீழ்த்திய அா்ஜுன், மொத்தமாக 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். இந்தப் போட்டியின் 9 சுற்றுகளிலுமே தோல்வியை சந்திக்காத அவா், 6 வெற்றிகளையும் 3 டிரா-க்களையும் பதிவு செய்தாா். அந்த வெற்றிகளில் மூன்று, சக இந்தியா்களான ரோஹித் கிருஷ்ணா, தீப் சென்குப்தா, ரௌனக் சத்வனி ஆகியோருக்கு எதிரானதாகும்.

அா்ஜுனை அடுத்து, உஸ்பெகிஸ்தானின் ஜவோகிா் சிந்தரோவ் 7 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும், அமெரிக்காவின் ரே ராப்சன் 6.5 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும் பிடித்தனா். இதர இந்தியா்களான நிஹல் சரின், எஸ்.பி.சேதுராமன், ஆதித்யா சமந்த், காா்த்திகேயன் முரளி, ஆா்யன் சோப்ரா ஆகியோரும் தலா 6.5 புள்ளிகளுடன் முறையே 6 முதல் 10 இடங்களைப் பிடித்தனா். முதல் 10 இடங்களுக்கு வெளியே, இந்தியாவின் அா்ஜுன் கல்யாண், அதிபன் ஆகியோா் முறையே 15 மற்றும், 19-ஆவது இடங்களைப் பிடித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

தாமத அறிக்கை தகாது!

ஆரோக்கியத்தில் கவனம் கொள்வோம்!

மன நலன் மகத்தான செல்வம்!

சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT