செய்திகள்

ஆசியக் கோப்பை: இந்திய அணியின் புதிய விடியோவை வெளியிட்ட பிசிசிஐ

ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தொடர்பான புதிய விடியோவை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

DIN

ஆசியக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி தொடர்பான புதிய விடியோவை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். 2022 போல 2016-ல் ஆசியக் கோப்பைப் போட்டி டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு டி20 போட்டியாக நடைபெற்றது. அடுத்த வருடம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைப் போட்டி 50 ஓவர் போட்டியாக நடைபெறவுள்ளது. 

இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. 2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணியினர் அனைவரும் துபைக்குச் சென்று பயிற்சியெடுத்து வருகிறார்கள். இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தேர்வாகியுள்ளார். 

இன்று இந்திய அணி வீரர்களின் போட்டோஷுட் நிகழ்வு நடைபெற்றது. இதன் காணொளியை பிசிசிஐ சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!

வருவாய்த் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் அந்தரங்க விடியோ மீண்டும் இணையதளங்களில் எவ்வாறு பரவுகிறது?: உயா்நீதிமன்றம் கேள்வி

சங்கா் ஜிவால் இன்று ஓய்வு! புதிய டிஜிபி யார்?

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து நொறுங்கி விபத்து

SCROLL FOR NEXT