சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார்.
துபையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் சோ்த்தது. அடுத்து இந்தியா 19.4 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வென்றது. ஹார்திக் பாண்டியா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் வீரர் மொஹமது நவாஸ் வீசிய 8வது ஓவரில் சிக்ஸர் அடித்த போது ரோகித் சர்மா இந்த சாதனையைப் படைத்தார். இதற்குமுன் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டில் 3497 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். தற்போது ரோகித் சர்மா இவரை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.