செய்திகள்

ஆசியக் கோப்பை: ஆப்கானிஸ்தானுக்கு 128 ரன்கள் இலக்கு 

DIN

ஆசியக் கோப்பை போட்டியில் இன்று வங்கதேசம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 127 ரன்களை எடுத்துள்ளது. 

ஆசியக் கோப்பை போட்டியில் இன்று வங்கதேசம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து 127 ரன்களை எடுத்தது. 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது. 

வங்கதேச அணியில் ஹொசைன் மட்டுமே 48 ரன்கள் எடுத்தார். மொஹமதுல்லா  25 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் முஜீப், ராஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். 

அடுத்து ஆடிவரும் ஆப்கனைஸ்தான் 7 ஓவர் முடிவில் 35 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து எடுத்துள்ளது. ஹசரதுல்லா 17 ரன்களுடனும், இப்ரஹிம் 8 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் வென்றால் நேரடியாக அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT