செய்திகள்

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்து முன்னிலை!

சக இந்திய வீரரான ஷ்யாம் நிகிலை வீழ்த்தினார். இதனால் 3 புள்ளிகளுடன்...

DIN

22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.

இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்கிறார்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 78 இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். துபை ஓபன் செஸ் போட்டி செப்டம்பர் 5 அன்று நிறைவுபெறுகிறது.

முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, 3-வது சுற்றில் சக இந்திய வீரரான ஷ்யாம் நிகிலை வீழ்த்தினார். இதனால் 3 புள்ளிகளுடன் 7 பேருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார் பிரக்ஞானந்தா. முதலிடத்தில் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, சஹாஜ் குரோவர் என மூன்று இந்திய வீரர்கள் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT