செய்திகள்

விஜய் ஹசாரே இறுதிச்சுற்றிலும் சதமடித்த ருதுராஜ் கெயிக்வாட்!

விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றில் மஹாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்துள்ளார்.

DIN

விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றில் மஹாராஷ்டிர அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டிக்காக ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் மஹாராஷ்டிரம் - செளராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன. விஜய் ஹசாரே இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாகத் தகுதியடைந்துள்ளது மஹாராஷ்டிரம். செளராஷ்டிர அணி, 2-வது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. டாஸ் வென்ற செளராஷ்டிர அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆரம்பத்தில் 4 ரன்களுக்கு பவன் ஷா ஆட்டமிழந்ததால் நிதானமாக விளையாடினார் ருதுராஜ். அரை சதத்தை எட்ட அவருக்கு 96 பந்துகள் தேவைப்பட்டன. அதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காலிறுதியில் இரட்டைச் சதமும் அரையிறுதியில் சதமும் எடுத்த ருதுராஜ், இறுதிச்சுற்றில் 125 பந்துகளில் சதமடித்தார். இறுதியில் 131 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

2021 முதல் விஜய் ஹசாரே போட்டியில் 10 இன்னிங்ஸிலேயே 7 சதங்களும் ஒரு இரட்டைச் சதமும் எடுத்துள்ளார் ருதுராஜ்.  

136(112)
154*(143)
124(129)
21(18)
168(132)
124*(123)
40(42)
220*(159)
168(126)
108(131)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலுக்கு அடியில் வெளியிடப்பட்ட திரௌபதி - 2 முதல் பார்வை!

ஜம்மு - காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!

நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!

வாக்குரிமைப் பேரணி: பிகாரிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

SCROLL FOR NEXT