செய்திகள்

விஜய் ஹசாரே இறுதிச்சுற்றிலும் சதமடித்த ருதுராஜ்: 248 ரன்கள் எடுத்த மஹாராஷ்டிரம்

இறுதிச்சுற்றில் செளராஷ்டிரத்துக்கு எதிராக 248 ரன்கள் எடுத்துள்ளது மஹாராஷ்டிர அணி.

DIN

விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றில் செளராஷ்டிரத்துக்கு எதிராக 248 ரன்கள் எடுத்துள்ளது மஹாராஷ்டிர அணி.

ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் மஹாராஷ்டிரம் - செளராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன. விஜய் ஹசாரே இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாகத் தகுதியடைந்துள்ளது மஹாராஷ்டிரம். செளராஷ்டிர அணி, 2-வது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. டாஸ் வென்ற செளராஷ்டிர அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆரம்பத்தில் 4 ரன்களுக்கு பவன் ஷா ஆட்டமிழந்ததால் நிதானமாக விளையாடினார் ருதுராஜ். அரை சதத்தை எட்ட அவருக்கு 96 பந்துகள் தேவைப்பட்டன. அதன்பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காலிறுதியில் இரட்டைச் சதமும் அரையிறுதியில் சதமும் எடுத்த ருதுராஜ், இறுதிச்சுற்றில் 125 பந்துகளில் சதமடித்தார். இறுதியில் 131 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

2021 முதல் விஜய் ஹசாரே போட்டியில் 10 இன்னிங்ஸிலேயே 7 சதங்களும் ஒரு இரட்டைச் சதமும் எடுத்துள்ளார் ருதுராஜ்.  

136(112)
154*(143)
124(129)
21(18)
168(132)
124*(123)
40(42)
220*(159)
168(126)
108(131)

மஹாராஷ்டிர அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. 10 ஓவர்கள் வீசி 1 விக்கெட் எடுத்து 25 ரன்கள் மட்டும் கொடுத்துள்ளார் ஜெயதேவ் உனாட்கட். சிராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT