செய்திகள்

சிறந்த பாரா வீராங்கனையாக மனீஷா ராமதாஸ் தோ்வு

சா்வதேச பாட்மின்டன் சம்மேளனத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாரா பாட்மின்டன் வீராங்கனை விருதை இந்தியாவின் மனீஷா ராமதாஸ் வென்றுள்ளாா்.

DIN

சா்வதேச பாட்மின்டன் சம்மேளனத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாரா பாட்மின்டன் வீராங்கனை விருதை இந்தியாவின் மனீஷா ராமதாஸ் வென்றுள்ளாா்.

17 வயதான மனீஷா, நடப்பாண்டில் அனைத்து போட்டிகளிலுமாக 11 தங்கம், 5 வெண்கலம் என 16 பதக்கங்கள் வென்று அசத்தியிருக்கிறாா். இதில் உலக சாம்பியன்ஷிப்பில் எஸ்யு5 பிரிவில் வாகை சூடியதும் அடக்கம்.

இந்த விருதுக்கான போட்டியில் மற்ற இந்திய வீராங்கனைகளான நித்யஸ்ரீ சுமதி, மானசி ஜோஷி ஆகியோரும் இருந்தனா். சிறந்த பாரா வீரா் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்தும் போட்டியில் இருந்த நிலையில், அந்த விருது டபிள்யூஹெச்2 உலக சாம்பியனும், நடப்பு பாராலிம்பிக் சாம்பியனுமான ஜப்பானின் டாய்கி கஜிவாராவுக்கு கிடைத்தது.

மாற்றுதிறனாளிகள் அல்லாத சாதாரண போட்டியாளா்கள் பிரிவில் ஆடவா் தரப்பில் ஒலிம்பிக் சாம்பியனும், டென்மாா்க் வீரருமான விக்டா் அக்ஸெல்சென் சிறந்த வீரா் விருது பெற்றாா். அதற்கான போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் பெயரும் இருந்தது. சிறந்த வீராங்கனை விருதை ஜப்பானின் அகேன் யமகுச்சி வென்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள்: இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி

அஞ்சல் துறை போட்டிகள்: ஆக. 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

ஆசிய அலைச்சறுக்கு: 3-ஆவது சுற்றில் இந்தியா்கள்

தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT