செய்திகள்

உலக சாம்பியன்ஷிப்: வெள்ளி வென்ற மீராபாய் சானு!

உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபல இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

DIN

உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபல இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, கொலம்பியாவில் நடைபெறும் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று ஒட்டுமொத்தமாக 200 கிலோ எடை தூக்கிய மீராபாய் சானுவுக்கு வெள்ளிப் பதக்கமும் 206 கிலோ எடை தூக்கிய சீன வீராங்கனை ஜியாங்குக்குத் தங்கப் பதக்கமும் கிடைத்தன.

2017 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற மீராபாய், இம்முறை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 2019 போட்டியில் 4-வது இடம் பிடித்தார். இந்த வருடம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 201 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார் மீராபாய் சானு.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரியில் தேசிய கொடி ஏற்றி விருது வழங்கினாா் ஆளுநா்

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த இனி அவகாசம் கிடையாது: உயா்நீதிமன்றம் திட்டவட்டம்

கிராமசபைக் கூட்டம்; எம்எல்ஏ பங்கேற்பு

காரைக்காலில் குடியரசு தின விழா

வாழை, மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்

SCROLL FOR NEXT