கால்பந்து தோல்வி: நெய்மரை சமாதானம் செய்த குரோஷியா அணி வீரரின் மகன் 
செய்திகள்

கால்பந்து தோல்வி: நெய்மரை சமாதானம் செய்த குரோஷியா வீரரின் மகன்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் தோல்வியடைந்த பிரேஸில் அணியின் வீரர் நெய்மரை குரோஷியா அணி வீரரின் மகன் சமாதானம் செய்தார். 

DIN

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவிடம் தோல்வியடைந்த பிரேஸில் அணியின் வீரர் நெய்மரை குரோஷியா அணி வீரரின் மகன் சமாதானம் செய்தார். 

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவும், பிரேஸில் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட நேரம் (90’) கோலின்றி முடிய, கூடுதல் நேரம் (30’) 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட பெனால்ட்டி ஷூட் அவுட்டில் குரோஷியா 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த ஆட்டத்தில் குரோஷியாவிற்கு எதிராக நெய்மர் அடித்த கோல் அவரது 7ஆவது கோலாகும். இதன்மூலம் பிரேஸிலுக்காக அதிக கோல்கள் அடித்த முன்னாள் நட்சத்திரம் பீலேவின் சாதனையை நெய்மர் சமன் செய்தார். 

எனினும் பிரேஸில் அணி காலிறுதியில் வெற்றி பெறாததால் நெய்மர் மைதானத்திலேயே உடைந்து அழுதார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT