ரிச்சா கோஷ் 
செய்திகள்

ஆஸ்திரேலிய மகளிர் அணியின் சாதனைகளை உடைத்த இந்திய அணி

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 16 வெற்றிகளைக் கண்ட ஆஸ்திரேலியாவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்திய மகளிர் அணி.

DIN

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 16 வெற்றிகளைக் கண்ட ஆஸ்திரேலியாவின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்திய மகளிர் அணி.

நவி மும்பையில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது இந்திய மகளிர் அணி. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. பெத் மூனி, டஹிலா மெக்ராத் ஆட்டமிழக்காமல் முறையே 82, 70 ரன்கள் எடுத்தார்கள். இந்தக் கடினமான இலக்கை நன்கு விரட்டிய இந்திய மகளிர் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டை செய்தது. இதன்பிறகு நடைபெற்ற சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி, 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துத் தோற்றது. 

இதன்மூலம் 2022-ல் முதல் தோல்வியை எதிர்கொண்டுள்ளது ஆஸ்திரேலிய மகளிர் அணி. மேலும் டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன்பு தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றிப் பயணத்துக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

இதுபோல கடந்த வருடம் ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸி. அணி தொடர்ச்சியாகப் பெற்ற 26 வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய மகளிர் அணி. தற்போது டி20 கிரிக்கெட்டிலும் அதேபோல ஆஸி. அணியின் சாதனையைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

நிா்வாகத் திறனால் சிறந்த உலகத் தலைவராக உருவெடுத்தவா் மோடி: புதின் புகழாரம்

ஸ்பீடு ஸ்கேட்டிங்: இந்தியாவுக்கு 2 தங்கம்

இது சீற்றமல்ல, எச்சரிக்கை!

திருக்கோஷ்டியூரில் அஹோபில மடம் ஜீயா் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT