ட்விட்டரின் அதிகாரபூர்வ கணக்குகளுக்கு இருக்கும் ‘ப்ளூ டிக்’ தங்க நிறமாக மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் சா்வதேச அளவில் புகழ்பெற்ற ட்விட்டா் சமூக வலைதளத்தை டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் சுமாா் ரூ.3,52,000 கோடிக்கு வாங்கியதை அடுத்து, நிறுவனத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ட்விட்டரில் பயனாளா்களின் அடையாளத்தை உறுதி செய்து நீலநிறக் குறியீட்டை வழங்க மாதந்தோறும் கட்டணம் 8 டாலர் (இந்தியாவில் சுமாா் ரூ.640) விதிக்கப்படவுள்ளதாக அறிவித்திருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் நீலநிறக் குறியீடு சந்தாவிற்கு ஐந்து நாள்களில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பணம் செலுத்தியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது ‘ப்ளூ டிக்’ தங்க நிறமாக மாறியிருக்கிறது. தங்க நிறமும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியின் வண்ணமும் மஞ்சள் என்பதால் அந்த அணியின் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மஞ்சளோடு பயணிப்போம்” என தெரிவித்துள்ளது.
இனி மும்பை கணக்குகளும் மஞ்சள்தான் என ரசிகர்கள் கிண்டலடிக்க சிலர் இதெல்லாம் போலி, எடிட் என மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் இனி ‘ப்ளூ டிக்’ இல்லை ‘தங்க நிறக் குறியீடு’ தான் என ரசிகரகள் பதிலளித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.